Thursday 22 September 2016

ஆயிரம் பொய் சொல்லி ...

கல்யாணத்த பத்தி இங்க ஒரு பெரிய பிரேமை இருக்கு . "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணணும்" வீட்ட கட்டி பாரு ,கல்யாணம் பண்ணி பாரு" , அப்படி இப்படின்னு .ஆனா நேற்றைய பதிவுக்கு அப்புறம் திடீர்ன்னு இங்க நெசத்துல என்ன காரணங்களுக்காக பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்கன்னு ஒரு நெனப்பு வந்தது .
என் மனசுல தோணின சில காரணங்கள் இங்க ..

1.பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திருச்சுன்னு பெத்தவங்களுக்கு தோண்றப்ப கல்யாணம் -இந்த வயசு சட்டப்படி ஒண்ணாவும் சமூகம் படிப்பு இப்படி சில விஷயங்கள் சார்ந்த  ஒண்ணாவும் இடத்துக்கு ஏத்தப்படி இருக்கு .இந்தியாவுல இன்னமும் குழந்தை திருமணம் முழுமையா ஒழிக்கப்படவே இல்ல .

2.அம்மா அப்பாவுக்கு வயசு ஆகிறப்ப.குறிப்பா அப்பாவுக்கு வயசாகிருச்சுன்னா .கல்யாண செலவு ,அதுக்கு பின்னால செய்ய வேண்டிய சீர் செலவு அதுக்கான source தேவை இதுக்கு காரணமா இருக்கு .

3.அம்மாவோ அப்பாவோ இதுவும் அப்பா இல்லாத பொண்ணுக்கு ,சில நெருங்கின சொந்தக்காரங்க  அவங்களுக்கு தோதான நேரத்துல அந்நேரத்துல அகப்பட்ட மாப்பிள்ளையை பிடிச்சு ஒரு கல்யாணம் .

4.தேடி அலையாம தானவே நல்ல மாப்பிள்ளை (இது நல்ல படிப்பு ,நல்ல வேலை +வருமானம் ,நல்ல சொத்து வசதி ,நல்ல அழகு /சிவப்பு நிறம்ன்னு எதுவாக வேணும்னா இருக்கலாம் ) இந்த பொண்ண கட்டிக்  கொடுங்கன்னு வலிய வந்து கேக்குறப்ப .

5.பொண்ணு மேல படிக்க மாட்டேன்னு மக்கர் பண்ணினா -அடுத்தது கல்யாணம் தான்

6.சில பொண்ணுங்க ஒரு டிகிரி முடிச்சிட்டு மேல படிக்கிறேன்னு சொல்றப்ப .இதுல ரெண்டு கேட்டகிரி இருக்கு .ஒண்ணு  மேல படிக்கிறேன்னு சொல்றப்ப அதுக்கு பொருத்தமா மாப்பிள்ளை கிடைக்காதோன்னு ஒரு கல்யாணம் .இன்னொன்னு வெளிநாட்டுல போய் படிக்கப்  போறேன்னு சொல்ற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மாப்பிள்ளையோட போன்னு அட்வைஸோடா  அநேகமா வெளிநாட்டுல வேல பாக்குற இல்ல வேல பாக்குற வாய்ப்பு இருக்குற பையன பாத்து கல்யாணம் .

7. பொண்ணு யாரையாவது லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ணுமோன்னு சந்தேகம் வந்துட்டா  அடுத்து வர ஜாதிக்கார பையன் ஓகே தான் .

8. பொண்ண   யாராவது   நமக்கு  பிடிக்காத பையன் லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ண சொல்லி தொந்தரவு பண்ணா -சட்டுன்னு ஒரு கல்யாணம் .

9. பிடிச்ச பொண்ண ஆளு வச்சு தூக்கிட்டு போய் கட்டாய கல்யாணம் .

10.பொண்ணோட அக்கா கல்யாணத்தன்னைக்கு காதலனோடு எஸ்கேப் ஆயிட்டா ,நிச்சயம் பண்ணின மாப்பிள்ளைக்கு இழப்பீடா அடுத்த பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையோட கல்யாணம் .

11.அப்புறம் எப்பவாவது சில அல்ப சொல்ப இடங்கள்ல  ஒரு பொண்ணும் பையனும்  இஷ்டப்பட்டு ஒண்ணா வாழ விருப்பப்பட்டா ...வாழ்க்கை இணை நல  ஒப்பந்த விழா .

Wednesday 21 September 2016

இருமணம் கொண்ட

ஒரு சனிக்கிழமை .நிறைய பேஷண்ட்ஸ் .பாத்துக்கிட்டே இருக்கிறப்ப ஒரு கணவன் மனைவி .இவங்களுக்கு ஒரு மகனும் மகளும் .ரெண்டு பெரும் படிப்பெல்லாம் முடிஞ்சி வேல பாக்குறாங்க .

"பிள்ளைங்க கிட்ட எங்க ரெண்டு பேருக்கும் எச் ஐவி இருக்குன்னு சொல்லிட்டோம் (சொல்ல சொல்லி கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேன் ).இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு பாக்குறோம் .ஒத்துக்க மாட்டேங்குறா .நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க ."
நான் "நிறைய பேஷண்ட்ஸ் இருக்காங்களே  ."
"பரவாயில்ல,நாங்க வெயிட் பண்றோம் .எல்லா பேஷண்ட்டும் பாத்து முடிச்சிட்டு பேசுங்க "

பொண்ணு அழகா ரொம்ப துடிப்பா இருந்தா .
என்ன சொல்றாரு உங்கப்பா ?
"ஒண்ணுமில்ல ஆண்ட்டி .கல்யாணம் பண்ண சொல்லி எல்லாரையும் அட்வைஸ் பண்ண சொல்றாங்க .நா பேசாம கல்யாணமே பண்ணிக்கிறேன் ."
ஒனக்கு இஷ்டமில்லையா ?
"அம்மா அப்பா ஹெல்த் எப்படி இருக்கு ?"
நல்லா இருக்கே .
"அப்புறம் ஏன் அத சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு கம்பெல் பண்றாங்க ?நாங்க இருக்கும் போதே பண்ணிக்கோன்னு ?"
எப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு நீ நினைக்கிற ?
"நல்ல பையனா இருந்தா ,எனக்கு ஓகே தான் .எனக்கு பையன பிடிக்கணும் ."
இந்த பையன பிடிக்கலையா ?
"ஆமா ஆன்ட்டி .பிடிக்கல .அப்பா மத்த எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாரு .பிளாக்மெயில் வேற .நா கல்யாணமே பண்ணிக்கிறேன் .பரவாயில்ல .ஆனா இந்த பையன எனக்கு பாத்தாலே பிடிக்கல ."

இப்ப அம்மா அப்பாவ வர சொன்னோம் .
"ஒத்துக்கிட்டாளா ?"(நம்ம திறமைல அப்படி ஒரு நம்பிக்கை )
கல்யாணத்துக்கு ஓகே தான் .இந்த பையனுக்கு ஓகே இல்லையாம் .
"ஆமா ,பையன் நல்லா இல்ல .எங்களுக்கே பிடிக்கல .ஆனா மத்த எல்லாம் இருக்கு .அப்புறம் எங்களுக்கு ஒடம்பு நல்லாருக்கும் போதே செய்யணும் .சர்வீஸ் வேற இன்னும் நாலு வருஷம் தான் இருக்கு .அவளா ஏதாவது பையன இஷ்டப்பட்டாலும் பரவாயில்ல ."

உங்க ரெண்டு பேர் ஹெல்த் நல்லா இருக்கு .அப்புறம் யாரோட ஆயுசையும் யாராலயும் கணிக்க முடியாது .அத காரணம் கட்டி அந்த பொண்ணுக்கு பிடிக்காத பையன ,இதுல உங்களுக்கும்  பையன பிடிக்கல, கல்யாணம் பண்ணி வைக்கிறத விட பெரிய முட்டாள் தனம் வேற எதுவும் இல்ல .

எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த அத பொண்ணு சொன்னா ,"ஆண்ட்டி ,நா இப்பதான் கொஞ்ச மாசமா வேலைக்கு போறேன்.இப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும்  இந்த பிரச்சனை இருக்கிறது தெரியும் .இவங்க இத சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க .இதே காரணத்துக்காக நா என் கேரியர்ல நல்லா வரணும் .நாளைக்கு  அம்மா அப்பாக்கு ஏதாவது ஆஸ்பத்திரி செலவுக்கு தேவைப்பட்டா செலவழிக்க பணம் சேத்து வைக்கணும்ன்னு நினைக்கிறேன் .கொஞ்ச நாள் போகட்டும் .இவங்க பாக்குற பையன் எனக்கு பிடிச்சிருந்தா இல்ல எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் ."

Saturday 17 September 2016

ஒருவேளை


எதுவாக  முடியுமோ அதுவாக இருப்போம்
ஒருவேளை ஆகியிருக்கும்  ,
ஆனால் இதனால் ,அதனால் அப்புறம் இதனால்
என்று சொல்லாதீர்கள்
எந்த விதியாலும் நம் பாதை மாற்ற முடியாது
ஆனவனால்  மட்டுமே முடியும்


 நாம் செய்வதை  செய்வோம் .
கனவு காணாதீர்கள்
வாய்ப்பு வீரனை கைவிடுகிறது ,மகுடமில்லாமல் அழ
எது  போல தோன்றுகிறார்களோ
அது போலவே மக்கள்
இது என் எண்ணம் .
செய்து முடித்தவன் ,செய்தவனாகிறான்

 
ஏற முடிந்த இடங்களில்  ஏறுவோம்  .
என்னிடம் சொல்லாதீர்கள்
உச்சி தொடாமல் செய்த கடும் புயல்கள் பற்றி
அண்டிய  சிகரத்தை தொடாத கழுகுண்டா
ஏறுபவன் எப்படியும் ஏறுவான்


"ஒருவேளை  ஆகியிருக்கும்" எனக்கு பிடிக்காத தொடர்
வலிமை இல்லை அதில் அப்புறம்  
வாழ்க்கையின் சிறப்பான  நிஜங்களை அது திரிக்கிறது
நான் நம்புகிறேன்
நம்மிடம் உண்டென 
நாம் எட்டுகிறோம்
நாம் வெல்கிறோம் 
நம் பாலைகள் எதுவான போதும்


"It Might Have Been" - Poem by Ella Wheeler Wilcox


We will be what we could be. Do not say,
"It might have been, had not this, or that, or this."
No fate can keep us from the chosen way;
He only might who is.

We will do what we could do. Do not dream
Chance leaves a hero, all uncrowned to grieve.
I hold, all men are greatly what they seem;
He does, who could achieve.

We will climb where we could climb. Tell me not
Of adverse storms that kept thee from the height.
What eagle ever missed the peak he sought?
He always climbs who might.

I do not like the phrase "It might have been!"
It lacks force, and life's best truths perverts:
For I believe we have, and reach, and win,
Whatever our deserts.

Thursday 8 September 2016

தேவதைகள்

ஒன்பது வயது சிறுமி .அம்மா இல்லை .அப்பா குடிகாரர் .தாத்தாவும் பாட்டியும் அழைத்து வந்தார்கள் .வயிறெல்லாம் உப்பலாக .மூச்சு திணறிக்கொண்டு .
டெஸ்ட்டுகள் செய்து  பார்த்ததில் வயிற்றில் TB தொற்று போல் தோன்றியது .சிகிச்சை ஆரம்பித்து   ஒரு மாதம் கழித்து வரும் படி சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் திரும்ப வந்தாள் .வயிறு இன்னமும் கொஞ்சம் உப்பலாக .காய்ச்சலும்  வலியும் குறைந்து இருந்தன .CT  ஸ்கேன் செய்ததில் வயிற்றில் இன்னமும் நெறி கட்டிகள் குறையாமல் இருப்பது தெரிந்தது .ஒருவேளை கேன்சராக இருக்குமோ என்று அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பினேன் .

அவர்களும் சிலபல டெஸ்ட்டுகள் செய்த பின் ,பயாப்சி (biopsy ) செய்ய முடிவெடுத்து போன வாரத்தில் செய்தார்கள் .பலமுறை ஆந்திராவில் இருந்து அலைந்து திரிந்தார்கள் தாத்தாவும் பாட்டியும் இதற்கென .எங்களுக்கென்று இவள் ஒருத்தி தான் இருக்கிறாள் என்பார்கள் அழுதபடி .இன்று சோதனை முடிவுகள் வந்து ,TB தான் என்று உறுதியானது .

இந்த இரண்டு வாரத்தில் இவள்  உடல் நலமும் இன்னமும் கொஞ்சம் சீரானது .இந்த இரண்டு வாரங்களில் அவளும் நானும் ஒரு ஆறு முறையேனும் சந்தித்திருப்போம் .சிரித்துக்கொண்டே இருப்பாள் .கேள்விக்கு மட்டும் பதில் சொல்வாள் .எப்போதும் பொம்மை போல அழகாக உடை உடுத்தி இருப்பாள் .
இன்று அவள் தாத்தா பாட்டியிடம் ,அடுத்து என்ன செய்ய வேண்டும் ,எப்போது வர வேண்டும் என்றெல்லாம் பேசி ,இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தேன் .

சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் .போகும் போது ,"டாக்டர் உங்க பேர் என்ன ?"என்  பேரு பூங்குழலி ."பூங்.....பூங்குலலி ...பூங்குழலி ."
"டாக்டர் பூங்குழலி ஆன்ட்டி -சால தேங்ஸ்"....

 

Saturday 3 September 2016

"டீ"

                             
                                Image result for tea paintings


டீ போடவென
ஒரு  தனித்திறன் தேவையாயிருக்கிறது
லேசாக இல்லாமலும்
அடர்வாக  இல்லாமலும்
டீ போடவென  ஒரு திறன் தேவைதான்
தித்திப்பும் மெல்லிய கசப்பும்
உதட்டில் பரவி
நாவில் பூச
பருகுவோர்  காதல் கொள்ளும்
டீயின் தனி சுவை
ஆக்குவது ஒரு திறனே தான்
ஏதோ ஒரு
லாகவமும் 
நேர்த்தியும் நாசூக்கும்
நிச்சயம் தேவைப்படுகின்றன
அடுத்தவர் விரும்பும்படி
டி போடவும்