Sunday 16 August 2015

எல்லோருடனும் தனியாக

சதை  மூடுகிறது  எலும்பை
ஒரு மனதை போட்டு வைக்கிறார்கள்
அதனுள்
சிலநேரங்களில்
ஒரு ஆன்மாவையும்
பிறகு பெண்கள்
ஜாடிகளை
சுவற்றில்  மோதி உடைக்கிறார்கள்
ஆண்கள் அதிகமாக
குடிக்கிறார்கள் 

அந்த ஒருவரை 
கண்டுபிடிப்பதில்லை
எவரும்

ஆனால் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்
படுக்கைகளின்
உள்ளே வெளியே ஊர்ந்தபடி
சதை மூடுகிறது எலும்பை
சதை தேடுகிறது
இன்னமும் சதையென

வாய்ப்பே இல்லை
நாம்
ஒற்றை விதியில்
சிக்கியிருக்கிறோம்

அந்த ஒருவரை  எவரும்
கண்டுபிடிக்க முடிவதில்லை

நகர கழிவு கிடங்குகள் நிறைகின்றன
குப்பை கூளங்கள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிறைகின்றன
மருத்துவமனைகள் நிறைகின்றன
கல்லறைகள் நிறைகின்றன


வேறு எதுவும் நிறைவதில்லை  

Alone With Everybody - 

by Charles Bukowski



the flesh covers the bone
and they put a mind
in there and
sometimes a soul,
and the women break
vases against the walls
and the men drink too
much
and nobody finds the
one
but keep
looking
crawling in and out
of beds.
flesh covers
the bone and the
flesh searches
for more than
flesh.

there's no chance
at all:
we are all trapped
by a singular
fate.

nobody ever finds
the one.

the city dumps fill
the junkyards fill
the madhouses fill
the hospitals fill
the graveyards fill

nothing else
fills.

Monday 10 August 2015

ஹான்ஸ்

சில வருடங்கள் சென்றே பார்க்கிறேன் இந்த சிறுவனை .
செக்கப் வந்தே சில வருடங்கள் ஆனது .இப்போது வயது 14ஆம் .வந்தவுடன் பேசவே இல்லை .கீழே பார்த்த படியே அமர்ந்திருக்கிறான் .ஒன்பதாம் வகுப்பு என்று சொன்னதை தவிர வேறு எதற்கும் பதிலில்லை .
 
"நல்லா படிக்கிறானா ?மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறானா ?"என்ற போது  அவன் அம்மா சொன்னார் "அவனையே கேளுங்க " .எதற்கும் பதில் இல்லை .திடீரென  அவன் அம்மா ,"என்னனு கேளுங்க,இவன் நல்லா இருக்கனும்ன்னு நான் மாத்திரை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில வாங்கிட்டு இவனுக்கு காசு கொடுத்து வாங்கி கொடுக்கறேன் .இவன் மாத்திரை கரெக்டா போடுறதில்ல  ,அதோட ஹான்ஸ் வேற போடுறான் ."
ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை .பதினான்கு வயது பள்ளி சிறுவன் அதிலும் படிப்பில் கெட்டிக்காரன்  ஹான்ஸ் போடுவானா ?ஒரு அம்மா இதை போய்  இட்டு கட்டி சொல்வதும் சாத்தியமில்லை .அப்போது உண்மையாகவே  இருக்க வேண்டும் .இவனுக்கு எங்கு கிடைத்திருக்கும் ?

"ஹான்ஸ் போடுறியா ?"இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் ." உங்கம்மா  சொல்றாங்க ?" அப்போதும் அதே தலை அசைவு மட்டுமே .அவன் அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ,மெதுவாக நானும்  என் கவுன்சிலரும் பேச்சு கொடுத்தோம் .

"நல்லா படிக்கிறீயா "
ஆமா செகண்ட் ரேங்க் .
"நல்லா படிச்சா தானே ,நல்லா இருக்க முடியும் ?"
ஆமா
"ஒருத்தங்க செய்யறதா இன்னொருத்தங்க குறை சொல்லக்கூடாது தானே ?"
ஆமா
ஒடம்புக்கு நல்லதில்லாதத செய்யலாமா ? "
ஹூஹும்  
"Friends யாராவது ஏதாவது வாங்கி கொடுத்தாங்களா ?
ஆமா
"என்ன ?சாக்லெட்டா ?"
ஆமா
"எப்பவாது ஹான்ஸ் வாங்கி கொடுத்தாங்களா ?"
............
"யோசிச்சு சொல்லு "
ஆமா
"ஹான்ஸ் நல்லதா?"
.........
"அப்புறம் ?"
...இல்ல
"உனக்கே  தெரியும் தானே ?"
........
"எதையும் செய்யறதுக்கு முன்னால இது கரெக்டா தப்பானு நீயே நல்லா யோசிசிக்கோ .."
உம்
"எப்பயும் நேரா பாத்து பேசு .கீழ பாக்காத .எங்களுக்கே நீ தப்பு பண்ணியிருப்பியோன்னு தோணுது .."
சரி .....
"அம்மாவ கூப்பிடலாமா ?"
சரி
அவன் அம்மாவை அழைத்து இனிமேல் மாத்திரை ஒழுங்கா சாப்பிடுவானாம் ."அம்மாகிட்ட சொல்லு "-இனிமேல் சரியா
மாத்திர போடுறேன் .நல்லா  படிக்கிறேன் "