Wednesday 14 July 2010

அம்மாவின் ஆர்ப்பாட்டம்

நினைத்தபடியே செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில் பெரிய அளவில் கூட்டத்தை சேர்த்து காண்பித்தார் அ .தி.மு.க தலைவி ஜெயலலிதா .தொலைகாட்சியில் பார்த்தவரையில் கண்ணெட்டும் அல்லது காமெரா எட்டும் வரையிலும் தலைகளே தெரிந்தன .இவையெல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது ஒரு பக்கம் இருக்க ,இதில் சில விஷயங்கள் பளிச்சென்று மனதில் பதிந்தன .

1.மகளிர் அணியின் (குத்?)ஆட்டம் .இதை ஜெயா டிவி பெரிதாக காண்பிக்கவில்லை என்றாலும் தமிழன் டிவியில் முக்கியமாக காண்பித்தார்கள் .

2.வழக்கம் போலவே மூலவரான எம்.ஜி.ஆர் மிஸ்ஸிங் .எங்கோ ஏனோ தானோ என்று அவர் முகம் தெரிந்தது. என்று திருந்துவார்களோ தெரியவில்லை .

3.ஏனோ கூட்டம் கொஞ்சம் கூட கலர்புல்லாக இல்லை .இவ்வளவு கூட்டம் சேர்க்க செலவழித்தவர்கள் ,அம்மா படம் போட்ட தொப்பி ,டி.ஷர்ட் (ஓரிருவர் அணிந்திருந்தனர் ) ,பானர்ஸ் என்று இன்னம் கொஞ்சம் செலவழித்திருந்தால் தொலைக்காட்சியில் பார்க்க நன்றாக இருந்திருக்கும் .

4.எல்லோருக்கும் மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன .இந்த மட்டுக்கும் மாற்றம் தான் .ஆனால் உட்கார்ந்திருந்தவர்கள் யாருமே இயல்பாக இல்லை .கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தார்கள் .(கட்சி தாவலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தா ,இவ்வளவு கூட்டம் வந்திருக்கே என்று யோசித்திருப்பார்களோ ?)

5.அம்மாவின் பேச்சு .ஆர்ப்பாட்டத்தின் ஹைலைட்டாக இருக்க வேண்டிய இது ரொம்ப ஏமாற்றமாக இருந்தது .மீண்டும் அரைத்த மாவையே அரைத்தார் .எத்தனையோ முறை எத்தனையோ பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் என்று எல்லோருமே பலமுறை கேட்ட விஷயங்கள் தான் .பேச்சு ஸ்டைல் வேறு அறிக்கை போலவே இருந்தது (அறிக்கை எழுதுற ஆளையே வச்சு பேச்சும் எழுதுனா இந்த கதி தான் .ஆள மாத்துங்க ).வகுப்பில் பாடம் நடத்தும் இழுவை ஆசிரியர் லெக்சர் போல இருந்தது இந்த பேருரை .
இத்தனை கூட்டம் கிடைக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டமாக ,இன்னமும் மக்களை சுண்டி இழுக்கும் படி ஆரவாரமாக பேச வேண்டாமா ?ஏனோ இவர் எல்லா மேடைகளிலும் இப்படியே வழவழா கொழ கொழாவென்றே பேசுகிறார் (கலைஞர் அளவிற்கு இல்லையென்றாலும் ஸ்டாலின் அளவிற்காவது பேச வேண்டாமா ?)
ஒரு எம்.ஜி.ஆர் பாட்டாவது பாடியிருக்கலாம் (திருவளர் செல்வியோ ,நான் தேடிய தலைவியோ என்ற பாட்டையாவது )
இறுதியில் இவர் பேசிய தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு.

6.இதற்கு உடனே தி மு க தரப்பு ,ஆட்சி மாறும் என்று கணிக்க இவர் என்ன ஆக்டபஸ் பாலா என்று சமயோசிதமாக கேட்டு வைத்தார்கள் .(நல்லாத்தான் யோசிக்கிறாங்க.பகுத்தறிவு தான் இதுக்கு காரணம் போல )

7.எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டத்தை முக்கிய செய்தியாக காண்பித்தார்கள் .(அம்மா வெளிய வந்ததே அவுங்களுக்கு செய்தி தான் ...)

8.அடுத்தது என்ன ...ஆவலாக இருக்கிறது .அம்மா கொடநாடு போயாச்சா ?


7 comments:

ரிஷபன் said...

அம்மா வெளிய வந்ததே அவுங்களுக்கு செய்தி தான்
உண்மைதான்.
அடுத்தது என்ன ...ஆவலாக இருக்கிறது .அம்மா கொடநாடு போயாச்சா ?
இந்த கிண்டல்தானே வேணாங்கிறது..

ராம்ஜி_யாஹூ said...

அம்மாவின் பேச்சுக்கு இதை விட அதிகமாகவே கூடங்களும், கை தட்டல்களும் இருந்தன பென்னகர்திலும், திருமங்கலத்திலும், ஆனால் வாக்குகளாக மாற வில்லை. நாளை நமதே என்று சொல்லி இருக்கிறார். நூற்றி இருபது இடங்களை பிடிக்குமா சட்ட மன்றத்தில்.

இனிமேல் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். தினமணியில் முதல் பக்கத்திலேயே போட்டாகி விட்டது- கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்-ஜெயலலிதா.

உடனேயே காமராஜர் பெயரில் கல்வி திட்ட விழா திருவல்லிக்கேணியில் - தொடங்கி வைப்பவர் முதல்வர் கலைஞர், விழா சிறப்புரை- தங்கபாலு காங்கிரஸ் மாநில தலைவர்.

பூங்குழலி said...

//அம்மா வெளிய வந்ததே அவுங்களுக்கு செய்தி தான்
உண்மைதான்//

தலைவி வீட்ட விட்டு வெளியே வந்தாலே கட் அவுட் வைக்கிற ஒரே கட்சி அ தி மு க தான் .....

//இந்த கிண்டல்தானே வேணாங்கிறது..//
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவரா இவர் செயல்படுறாரா ?கொடநாடு ,பையனூர் ன்னு எங்கேயாவது ஓய்விலதான் இருக்க முடியும் ன்னா ,கட்சியவாவது வேற யார்கிட்டயாவது ஒப்படைக்கணும் .இதுல வேற வெட்கமில்லாம "நான் அங்கிருந்து அறிக்கை விடலையா ?"ன்னு கேள்வி வேற.அறிக்கை விட இவங்க எதுக்கு .என்னால கூட இத விட நல்லா அறிக்கைகள் விட முடியும் .மீடியா கிடைக்காது அவ்வளவுதான் .

பூங்குழலி said...

//நாளை நமதே என்று சொல்லி இருக்கிறார். நூற்றி இருபது இடங்களை பிடிக்குமா சட்ட மன்றத்தில்.//

காசு வாங்கிட்டு மக்கள் கூட்டத்துக்கு வராங்க ,காசு வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க ....இதுல இந்த கூட்டம் சும்மா மொரேல் பூஸ்டர் மட்டும் தான் ன்னு எல்லோருக்குமே தெரியுமே ?எத்தனை இடம் ஜெயிக்கும்ன்னு கட்சியிலேயே கவலைப்பட்ட மாதிரி தெரியல .நமக்கு எதுக்கு அந்த கவலை?

பூங்குழலி said...

//தினமணியில் முதல் பக்கத்திலேயே போட்டாகி விட்டது- கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்-ஜெயலலிதா.

உடனேயே காமராஜர் பெயரில் கல்வி திட்ட விழா திருவல்லிக்கேணியில் - தொடங்கி வைப்பவர் முதல்வர் கலைஞர், விழா சிறப்புரை- தங்கபாலு காங்கிரஸ் மாநில தலைவர்//

இனி துக்ளக்ல இந்த குற்றச்சாட்டுகளை பற்றி ஒரு கட்டுரை வரும்

//- தொடங்கி வைப்பவர் முதல்வர் கலைஞர், விழா சிறப்புரை- தங்கபாலு காங்கிரஸ் மாநில தலைவர்.//

கூட்டணி மாற்றம் சந்தேகம் தான் ன்னு நினைக்கிறேன்


//இனிமேல் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.//

ம்ம்ம்ம் பார்ப்போம் ...

Anonymous said...

//காசு வாங்கிட்டு மக்கள் கூட்டத்துக்கு வராங்க ,காசு வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க ...//

கவலை அளிக்கும் செய்தி...
இப்படியே போனால் ரொம்ப கஸ்டம்...

பூங்குழலி said...

//கவலை அளிக்கும் செய்தி...
இப்படியே போனால் ரொம்ப கஸ்டம்//

கொஞ்ச நாள் காசு கொடுப்பவருக்கு மட்டும் ஒட்டு போடுவார்கள், பின்னர் காசை வாங்கிவிட்டு அவர்கள் விருப்பப்படி போடுவார்கள் .இது நடக்கலாம் என்று நினைக்கிறேன் .இல்லையென்றால் நீங்கள் சொன்னபடி கஷ்டம் தான்