Thursday 11 June 2009

மிட்டாய்க்காரன்


பீய்ங் பீய்ங் பீய்ங்ங்ங்ங்ங்ங் ...........

இந்த சத்தம் கேட்டதுமே உற்சாகம் தொத்திக் கொள்ளும் நான் சிறுமியாய் திருநெல்வேலியில் இருந்த நாட்களில் .மிட்டாய்க்காரன் வருவதை அறிவிக்கும் ஓசையாக அறிந்துவைத்திருந்தேன் இதை .மிட்டாய்க்காரன் வந்ததும் ஆச்சியிடம் சில்லறையை வாங்கிக் கொண்டு தெருவில் இறங்கி ஓடுவேன் .


தலையில் ஒரு தலைப்பாகை .கையில் ஒரு நீள கம்பு .அதற்கு தலைப்பாகையாய் ஒரு பொம்மை .அதன் கீழ் சுத்தப்பட்டிருக்கும் மிட்டாய் .அதோடு வருகை அறிவிக்கும் அந்த ஒலி .ச்சுயிங் கம் போல பஞ்சு மிட்டாய் நிறத்தில் இருக்கும் இந்த மிட்டாய் .இதை நேர்த்தியாக கொஞ்சம் விசாரிப்புகளுக்கு பிறகு கையில் வாட்சாகவும் ,விரலில் மோதிரமாகவும் ,சில நேரங்களில் காதில் கம்மலாகவும் கூட சுற்றி விடுவார் .பெருமையாக இருக்கும் .வாட்சை மெதுவாக கொஞ்சம் நக்கி, கொஞ்சம் கடித்து என்று தின்பதற்கும் அத்தனை சுவை .


பல வருடங்களாகி விட்டன .நானும் மிட்டாய்க்காரனை இல்லாமல் போய் விட்டதாக கருதி ,மறந்து தான் போயிருந்தேன் .கொடைக்கு சென்ற போது கோவிலுக்கு வெளியே, கூட்டத்தில் ,சுற்றி வரும் சிறுவர்கள் நடுவே ,அட ,மிட்டாய்க்காரனே தான் .


5 comments:

மயாதி said...

ஒருமுறை எங்களூர் மிட்டாய்க் காரனையும் நினைத்துப் பார்க்கிறேன்....
இனிக்கிறது வாய்

பூங்குழலி said...

கவிதை போலிருக்கிறது மயாதி ..நன்றி

ஆயில்யன் said...

எங்க ஊர்ல பல்லி மிட்டாய்க்காரன் சொல்லுவோம் சைக்கிள்ல வருவாரு டெய்லி

எனக்கு தேள் மிட்டாய் அப்புறம் பல்லி மிட்டாய் ரொம்ப்ப பிடிக்கும்!

பூங்குழலி said...

தேள் மிட்டாயா ?நான் கேள்விப்பட்டதே இல்லையே ?

ஆயில்யன் said...

//பூங்குழலி said...

தேள் மிட்டாயா ?நான் கேள்விப்பட்டதே இல்லையே ?
///

ஹய்யோ!
ஹய்யோ!!

நீங்க வாட்ச்!

எனக்கெல்லாம் தேள் & பல்லி :)))))