Friday 5 June 2009

இப்படியும்

முதன்முறையாக சிகிச்சைக்கென வரும் நோயாளிகளிடம் நாங்கள் தவறாமல் கேட்கும் கேள்விகள் இரண்டு .
1.எத்தனை நாட்களாக எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உங்களுக்கு தெரியும் ?
2.எதற்காக முதன்முறை பரிசோதனை செய்து கொண்டீர்கள் ?


இரண்டாவது கேள்விக்கான அநேகரின் பதில்கள் .
1.உடல்நலக் குறைவின் காரணமாக
2.ஏதோ அறுவை சிகிச்சைக்கென செய்த சோதனைகளில்
3.கர்ப்பமாக இருக்கும் போது
4.கணவனுக்கோ மனைவிக்கோ நோய் இருப்பது தெரியவந்த போது
5.சந்தேகத்தின் பேரில்
இப்படிப்பட்ட காரணங்களையே பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் .


வழக்கம்போல் ஒருவரை நான் இதே கேள்விகளை கேட்ட போது அவர் சொன்ன பதில் ,"கல்யாணம் நிச்சயம் ஆயிருந்துது .பொண்ணு வீட்டில எச்.ஐ.வி டெஸ்ட் பண்ண பெறகு தான் கல்யாணம்ன்னு முடிவா சொல்லிட்டாங்க .அப்படி பண்ணப்ப தான் தெரிஞ்சிது .ஆனா பொண்ணுக்கு நோய் இல்ல .அதனால கல்யாணத்த நிறுத்திட்டாங்க ."உடன் வந்திருந்த அவர் அண்ணன் சொன்னார் ,"எங்கூரில இந்த நோய் நெறைய பேருக்கு இருக்கு .அதனால நெறைய பொண்ணு வீட்டுல இப்ப இப்படி கேக்குறாங்க "என்று .


ஆச்சரியமாக இருந்தது .இப்படியும் செய்கிறார்களா என .பெண் வீட்டில் செய்ய சொன்னதே ஆச்சரியமாக தான் இருந்தது .அதை விடவும் இவர்கள் செய்ததும் ,செய்த பின் நோய் இருப்பதை பெண் வீட்டில் ஒப்புக் கொண்டதும் ,எல்லாமே ஆச்சரியம் தான் .


2 comments:

"உழவன்" "Uzhavan" said...

சபாஷ்.. இவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்ட இளையதலைமுறையை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

பூங்குழலி said...

நிச்சயமாக ,இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான்.