Monday 2 March 2009

சிறை




நடந்து கொண்டிருக்கிறேன்
முன்னர் பலரும் நடந்த பாதை தான்
காலில் தட்டியது சின்னதாய் நூல்


தூர எறிந்திருக்கலாம் தாண்டியேனும் குதித்திருக்கலாம்
ஏதும் நினையாமல் கையில் எடுத்து விட்டு
ஏந்தியபடியே நடக்கிறேன்


நடந்துகொண்டே இருக்கிறேன்
இன்னும் சில நூல்கள் என் கையில் இப்போது
போய்க் கொண்டே இருக்கிறேன்


கண்மறைக்கும் வரையிலும்
புலனாகவில்லை
நூலுக்குள் இப்போது நான் சிறைப்பட்டிருக்கிறேன்


பட்டாம்பூச்சியாவதா ,சமாதியாவதா ?
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நுனி இன்னமும் என் கையில்


2 comments:

nitham manasil utham said...

மருத்துவருக்கும் மனச்சிக்கலா?

அந்த நூலின் நுனி, வாழ்க்கையின்பால் நாம் கொண்ட பற்றுதலின் ஒரு துளி.
சிக்கிக் கொண்டு தவிக்கும்போதும் நுனி இன்னும் உங்கள் கையில்.
அந்தப் "பற்றின்" நுனியை , விட்டுவிட விலகிப் போகும் சிக்கல்கள் நம்மைவிட்டு என,

சிந்திக்க வைக்கும் சீரிய கவிதை.
வாழ்த்துக்கள்

பி.கு. என் தலைப்பு, ச்ச்ச்சும்மா .

பூங்குழலி said...

கவிதைக்கு விளக்க உரை கொடுத்தது போன்ற உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி