Thursday 26 February 2009

நிஜம்




சத்தியமாக ,நம்புங்கள் என்னை
நான் அழுகிக் கொண்டிருக்கிறேன்
என்னில் எங்கும் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது


என்னை சுற்றி மொய்க்கும் ஈக்களுக்கு தெரியாமல் போனாலும்
என் கால் தீண்டும் எலிகள்
அதை உணர்ந்தே ஓடுகின்றன


என் புண்கள் பலவும் புரையோடிப் போயிருக்கின்றன
வற்றாமல் சீழ் வடிந்து கொண்டே இருக்கிறது அவற்றில்
எத்தனை களிம்புகளிலும் சுகம் கிட்டாமல்

என் வெளிப் பூச்சைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்
என் அழுக்கைக் கொண்டே அதை நான்
முலாம் பூசியிருக்கிறேன்

எனக்காக ஏதேனும் மருந்திட விழைந்தால்
என்வெளிப் பூச்சை மட்டும் கொஞ்சம் கீறாமல் இருங்கள்
என் ரணங்கள் கொஞ்சமேனும் ஆறட்டும்


5 comments:

பாண்டித்துரை said...

உள் வலியினை உணர்த்துகின்ற கவிதை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

ஆர்.வேணுகோபாலன் said...

ஒரு வார்த்தையில் - அற்புதம்
இரண்டு வார்த்தைகளில் - உண்மையின் தாக்கம்
மூன்று வார்த்தைகளில் - இன்னும் நிறைய எழுதுங்கள்

வேணு (த.வே )

பூங்குழலி said...

நன்றி பாண்டித்துரை ,ஜோதிபாரதி

பூங்குழலி said...

"ஒரு வார்த்தையில் - அற்புதம்
இரண்டு வார்த்தைகளில் - உண்மையின் தாக்கம்
மூன்று வார்த்தைகளில் - இன்னும் நிறைய எழுதுங்கள்"



நான்கு வார்த்தைகளில்
உங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி