Wednesday 21 January 2009

வேண்டும் ஒரு சாபம்

அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்
நீண்டதொரு தவம் செய்து
வரமாக அதைக் கோரி பெறும்
அவகாசங்கள் எனக்கில்லை

சொல்லிடுக்கில் காயப்பட்டு
அவசரமாய்
என் கன்னத்தில் கோள் சொல்லி
ஓடி வரும் கண்ணீரும்
முன் அறிவிப்பாய் மனவலி உணர்த்திவிடும்
முக மாற்றமும்

இனி என்றும் வராமல் உறையும் படி
அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்


3 comments:

ஆதவா said...

அருமையான களம்.. சொல்லப்படுவது தெளிவாகச் சொல்லப்படுகிறது..

ஆனால், ஆனால்...

அது சாபமா????? அல்லது வரமா?????

"உழவன்" "Uzhavan" said...

//என் கன்னத்தில் கோள் சொல்லி
ஓடி வரும் கண்ணீரும்//

அருமையான வரிகள்.

//அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்//

இந்த வரியின் மூலம், உங்களிடத்தில் எங்கள் ஊர் பாரதியைக் காணுகிறேன். வாழ்த்துக்கள்!

உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com

பூங்குழலி said...

ரசித்ததற்கும் வாழ்த்தியதற்கும் நன்றி உழவன்