Friday 24 October 2008

என் சிரிப்பு


என் சிரிப்பை சிறையெடுத்திருக்கிறேன்
இப்போது -
எவர் பொருட்டும்
அது களவு போய்விடக் கூடாதென


அதை நீட்ட நினைப்பவர்களும்
நீக்க நினைப்பவர்களுமாக
பெரும் யுத்தம்
நடந்து கொண்டே தான் இருக்கிறது


என் சிரிப்பை புதைத்திருக்கிறேன்
ஒரு சமயம் -
எவரும் கண்டு விடாமல் இருக்க


பல நேரங்களில்
என் சிரிப்பை மீட்டிருக்கிறேன்
எனை ஆண்ட பல வேந்தர்கள்
ஆணைக்குட்பட்டதாகவே இருந்தது என் சிரிப்பு
அப்போது


காணாமல் போயிருந்தது சில காலம்
வெளியில் தேடி
அலைந்து மெலிந்த பின்
என்னுள் ஓரமாய் ஒளிந்திருந்தது
துணிவை சேர்த்து ஒட்டிக் கொண்டேன்


இப்போது
என் சிரிப்பு எப்போதும்
தேங்கியிருக்கிறது
என் கடைவாய் ஓரங்களில் ..............


2 comments:

Kavinaya said...

//எனை ஆண்ட பல வேந்தர்கள்
ஆணைக்குட்பட்டதாகவே இருந்தது என் சிரிப்பு
அப்போது//

நல்ல கவிதை. படமும் பொருத்தம். வாழ்த்துகள் பூங்குழலி.

அமுதா said...

நல்ல கவிதை

/*இப்போது
என் சிரிப்பு எப்போதும்
தேங்கியிருக்கிறது
என் கடைவாய் ஓரங்களில் */
என்றும் இருக்கட்டும்....